பிரியாணியில் விலங்கு தலை....பேரதிர்ச்சியில் இலங்கையர்கள்!
இலங்கையில் கொழும்பு - கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய உணவுப் பொதியில் எலியின் தலைப் போன்ற ஒரு விலங்கொன்றின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைக்கு அனுப்பி உணவு மாதிரியின் அறிக்கை கிடைத்த பின்னர் குறித்த விலங்கு எதுவென அடையாளம் கண்டறியப்படும் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.