தொப்பையைக் கடகடவென குறைக்க வேண்டுமா? பிரியாணி இலை தண்ணீர் மட்டும் போதும்
காலை வெறும்வயிற்றில் பிரியாணி இலை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
பிரியாணி இலை
சமையலறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் பிரியாணி இலையும் ஒன்றாகும். சுவையை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.
உடம்பிற்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களை கொடுக்கின்றது.
பிரியாணி இலை ஊற வைத்த தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். குறித்த நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
வெறும்வயிற்றில் பிரியாணி இலை தண்ணீர்
காலை வெறும் வயிற்றில் பிரியாணி இலையை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால், எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். வயிறு நீண்ட நேரம் நிரம்பி உணர்வை அளிப்பதால், அதிக உணவு சாப்பிடுவது தவிர்க்க முடியும்.
தொடர்ந்து இந்த தண்ணீரை குடித்து வந்தால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். மேலும் பிரியாணி இலையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
இந்த இலையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதுடன், பாக்டீரியா எதிர்ப்பு பண்பும் நிறைந்துள்ளது. தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதுடன், குளிர்காலத்தில் இந்த நீரை பருகுவதால் சளி, இருமல் பிரச்சனையை தவிர்க்க முடியும்.
பிரியாணி இலையில் இருக்கும் சினியோல் வீக்கத்தைக் குறைப்பதுடன், அதனை எதிர்த்து போராடவும் செய்கின்றது. குறிப்பாக குளிர்காலத்தில் வீக்கம் பிரச்சினை அதிகரித்தால், இந்த நீரை ஒருநாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் சிறந்த பானமாக இருக்கின்றது. இரவு தூங்கும் முன்பு இதனை பருகலாம்.
சிறுநீரக கல் பிரச்சனையை தடுக்க உதவுகின்றது. இந்த நீரை நாள் ஒன்றிற்கு 2 அல்லது மூன்று முறை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
பிரியாணி இலை தண்ணீர் எப்படி தயாரிப்பது?
பாத்திரம் ஒன்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு அதில் 2 அல்லது 3 பிரியாணி இலை, அரை ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது இலவங்கப்பட்டை தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் பாதியாக வற்றியதும் இறக்கிவிட்டு, வடிகட்டி குடித்து வரவும். வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைக்கு மருந்து எடுப்பவராக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |