தங்கத்தால் அலங்கரிப்பட்ட பிரியாணி. ஒரு பிளேட் விலை எவ்வளவு தெரியுமா? குவியும் வாடிக்கையாளர்கள்!
தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 , 000 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பவம் உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணியாக கருதப்படுகிறது. இந்தியா போலவே வளைகுடா நாடுகளிலும் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. குறிப்பாக , துபாயில் விதவிதமாக பிரியாணி தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
ஏராளமான பிரியாணி ரெஸ்டாரன்டுகளும் துபாய் முழுவதும் நிறைந்துள்ளன. அந்த வகையில், துபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியில் 23 கேரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு பிளேட் அலங்கரிக்கப்பட்ட பிரியாணியின் விலை ரூ.20,000 ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் ஒரு பிளேட் பிரியாணியை உண்ண முடியும்.
இந்தியாவைச் சேந்த பம்பாய் ஆரோ நிறுவனம் துபாயில் உணவகம் துவங்கி 1 வருட நிறைவை முன்னிட்டு 23 கேரட்டால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பிரியாணி ரூ.3,97,087 க்கும் விற்கப்படுவதாகத் தெரிகிறது.
இதுகுறித்த புகைப்படமும் செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.