கணவரை பிரிந்து மகளுடன் வாழும் உலக அழகி- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய்
உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இன்றும் பலருக்கு உலக அழகி யார் என்று கேட்டால் ஐஸ்வர்யா ராயை தான் தெரியும். சினிமாத்துறையிலும் உச்ச நாயகியாக இரந்து வருகிறார்.
இவர் கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு இந்தியாவின் அடையாளமாக மாறினார்.

ஐஸ்வர்யா ராய் நவம்பர் 1ஆம் தேதியான இன்று அவருடைய 51வது பிறந்த நாளை அவருடைய மகளுடன் கொண்டாடியுள்ளார்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்ப காலங்களில் ஒன்றாக இருந்த தம்பதியினர் தற்போது பிரிந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஏற்றால் போல் ஐஸ்வர்யா ராயும் மகளுடன் தனியாகவே நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
இப்படி இருக்கும் சமயத்தில் தனிமையில் இருக்கும் ஐஸ்வர்யா ராயிடம் 850 - 900 கோடிகள் வரையிலான சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்தியாவில் அதிக சொத்து மதிப்புடைய நடிகையாக திகழும் ஐஸ்வர்யா ராய்க்கு மும்பையில் மிகவும் ஆடம்பரமான பங்களா உள்ளது.

அத்துடன் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் தொடங்கி பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராகவும் இருந்து வருகிறார், மற்றும் ஐஸ்வர்யா ராய்யிடம் பல முன்னணி சொகுசுக்கார்கள், வைரங்கள், தங்க நகைகள் என ஆபரணங்களும் உள்ளன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        