சிங்கப்பெண்ணே சீரியல் வில்லன் யார் தெரியுமா? விஜய்யின் அண்ணனாக நடித்தவரா?
மின்சாரக் கண்ணா படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்த நடிகர் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
நடிகர் சந்திரகாந்த்
தென்னிந்தியா சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் நடிகை ஸ்ரீபிரியாவின் தம்பி நடிகர் சந்திரகாந்த் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதோடு சந்திரகாந்த் நடிகை சுகன்யா நடித்த திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமடைந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மின்சார கண்ணா என்ற திரைப்படத்தில் விஜய்யின் அண்ணனாகவும் நடித்து பிரபலமடைந்தவர் தான் சந்திரகாந்த்.
நடிகர் விஜய் நடிப்பில் யாரும் எதிர்பார்க்காத அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட் என மொத்தமாக ஜெயித்த திரைப்படம் தான் மின்சார கண்ணா. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் பலர் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.
அதே நேரத்தில் இந்த நடிகர்கள் எங்கே போனார்கள் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதில் நடிகர் விஜய்யின் அண்ணனாக கூர்கா வேடத்தில் குஷ்புவின் வீட்டில் நடித்தவர் தான் நடிகர் சந்திரகாந்த்.
இவர் நடிகை சுகன்யாவுடன் அன்று கண்ட முகம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சந்திரகாந்த் செகண்ட் ஹீரோ போல மாஸாகவும் காமெடியாகவும் நடித்து இருப்பார்.
அதோடு சந்திரகாந்த் நடிகை ஸ்ரீ பிரியாவின் தம்பிதான். ஸ்ரீ பிரியா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு சில சீரியல்களை இவரே இயக்கியும் இருந்தார். இந்த நிலையில் தான் இப்போது நடிப்பில் இருந்து ஸ்ரீ பிரியா விலகி இருக்கிறார்.
மேலும் அவருடைய தம்பி சந்திரகாந்த் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கனகா நடித்த ஒரு படத்தில் கதாநாயகனாகவும் சந்திரகாந்த் நடித்திருந்தார்.
அதோடு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் திரைப்படத்தில் நெடுமுடி வேணு என்று கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு விஜய்யின் மின்சார கண்ணா திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படத்திற்கு பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.
தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகி ஆனந்தி குடும்ப சூழ்நிலைக்கு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்கிறார்.
அங்கு வில்லனாக சந்திரகாந்த் இருக்கிறார். கார்மெண்ட்ஸியில் இவர் செய்யும் செயல்கள் பார்த்து பலரும் திட்டிக் கொண்டிருந்தாலும் இந்த சீரியல் தற்போது டிஆர்பியில் முதல் இடத்தில் பிடித்து வருகிறது.
இந்த சீரியலில் சந்திரகாந்த் வயதான தோற்றத்தில் இருப்பதால் இவர்தான் விஜய்யின் அண்ணனாக மின்சார கண்ணா திரைப்படத்தில் நடித்தவரா இவர் என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.தற்போது நடிகர் சந்திரகாந்த் குறித்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |