பைக்கில் ஆபத்தான சாகசம்- வீடியோவை வெளியிட்டு எச்சரித்த பொலிசார்
இந்தியாவின் டெல்லியில் பைக்கில் ஆபத்தான முறையில் சென்ற ஜோடியின் வீடியோவை வெளியிட்டு எச்சரித்துள்ளனர் பொலிசார்.
தற்போதெல்லாம் பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் வரும் ஆபத்துகளை எத்தனை முறை எச்சரித்தாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பொலிசார் கொடுத்தாலும் திருந்தியபாடில்லை.
இதனையடுத்து இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைளை பொலிசார் எடுத்து வருகின்றனர், இதன் ஒருபகுதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு விழிப்புணர்வு வீடியோவை டெல்லி காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், ஆண், பெண் ஜோடி ஒன்று மிக வேகமாக பைக்கில் செல்கின்றனர், பின்னால் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு பயணிக்கிறார் அந்த பெண்.
ஒரு கட்டத்தில் சாகசங்களில் ஈடுபட அந்த பெண் கீழே விழும்படி வீடியோ முடிவடைகிறது.
பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
JAB WE MET with an accident due to reckless driving.#DriveSafe@dtptraffic pic.twitter.com/adfwIPtHlX
— Delhi Police (@DelhiPolice) June 28, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |