பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் செய்தி வாசிப்பாளர்... யார்னு தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7ல் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, அனிதா சம்பத், லாஸ்லியா ஆகிய செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.
சீசன் 7ல் ஜாக்குலின், ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.
தற்போது பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |