இணையவாசிகளின் பொறாமையை அதிகரிக்கும் இலங்கை அழகி! அழகில் மயங்கிய நெட்டிசன்கள்
மெழுகு சிலைப்போல் இருக்கும் இலங்கை அழகி ஜனனியின் வீடியோக்காட்சி இணையவாசிகளை சற்று பொறாமைப்பட வைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்
இலங்கையில் ஒரு சாதாரண தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் ஜனனி. இவரின் தீவிர முயற்சியால் பிக் பாஸ் சீசன் 6 ன் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் குட்டி தங்கையாக மாறி சுமார் 50 நாட்களுக்கு மேல் எலிமினேட்டாகாமல் இருந்தார். இவரின் குட்டி சில்மிஷங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் நன்றாக பிரபல்யமடைந்தார்.
பிக் பாஸ் வீட்டில் ஒன்றும் பண்ணாமல் அதிர்ஷ்ட போட்டியாளராகவே இருந்து வந்தார். இவரின் வாக்குகள் குறைவாக இருக்கிறது எனக் கூறி வெளியேற்றப்பட்டார். ஆனாலும் இவரின் அதிர்ஷ்டத்திற்கு ஒரு அளவில்லாமல் வெளியில் வந்த பின்னரும் இவருக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது.
இலங்கை அழகியின் வைரலாகும் வீடியோ காட்சி
அந்தவகையில் இவருக்கு விஜயுடன் லியோ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இவரின் மவுசு இந்திய மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தொடர்ந்து இவர் ரீல்ஸ், போட்டோ ஷீட் என பிஸியாக இருந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கலக்கலான கருத்துக்களை வீசி வருகிறார்கள்.
இதன்படி, ரோஸ் கலர் தாவணியில் இலங்கை மெழுகுப்போல் ஒரு வீடியோவை வெளியீட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,“ பூட்டி வைத்த இலங்கைப் பொக்கிசம்” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.