அடுத்த பிக்பாஸ் சர்ச்சை பிரபலம் தீடீர் மரணம்; கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
தமிழ் பிக்பாஸ் சீசன் 4 வரை நடைப்பெற்று நிறைவடைந்தது. இந்தியில் 14 வது சீசனை எட்டிய இந்த பிக்பாஸுல் 10 வது சீசனில் கலந்துகொண்டவர் தான் ஸ்வாமி ஓம். தன்னைத் தானே கடவுளின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையானது. இவர், அப்போதே இவரின் மீது பல சர்ச்சைகள் பிக்பாஸ் சீசனில் அரங்கேறி இருந்தது.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்வாமி ஓம் சிகிச்சைக்க்குப் பிறகு தொற்றிலிருந்து மீண்டார். ஆனாலும் அவரது உடல் மிகவும் நலிவடைந்தது.
இதையடுத்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை மரணமடைந்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக முடக்குவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இறுதி சடங்குகள் இன்று மதியம் நடைபெற்று முடிந்தது.