பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லும் போது தனலட்சுமியிடம் அசிம் சொன்னது என்ன தெரியுமா?
பிக்பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேறிய போது அசிம் மிக உருக்கமாக பேசியது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6
இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6ல் ஒவ்வொரு வார இறுதியிலும் குறைவான வாக்குகளை கொண்டவர்கள் வெளியேறி வருகிறார்கள்.
இதன்படி இந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார், பரபரப்பான மிக உறுதியான போட்டியாளராக பார்க்கப்பட்ட தனலட்சுமி வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது எனலாம்.
பலரும் கமெண்டில் கதிரவன், ரக்ஷிதா, மைனா உள்ளே இருக்க தனலட்சுமியை எதற்காக வெளியேற்றினார்கள் என கேட்டு வருகிறார்கள்.
அசிம் சொன்ன வார்த்தைகள்
பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் மைனா, அசிம் மற்றும் தனலட்சுமி எலிமினேட் பட்டியலில் இருந்தனர்.
இவர்களில் யார் வெளியேறுவார் என கமல்ஹாசன் கேள்வி எழுப்ப பலரும் அசிம் மற்றும் மைனாவின் பெயரை குறிப்பிட்டனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக தனலட்சுமி வெளியேற்றப்பட்டார், அப்போது அசிம் அவரிடம், இனிமேல் நீ பிக்பாஸ் தனலட்சுமி தான், யார் உன்னிடம் பிக்பாஸ் வீட்டிலிருந்து என்ன எடுத்து வந்தாய் என கேட்டால் பிக்பாஸ் டைட்டிலை எடுத்து வந்தேன் என கூறிவிடு என தெரிவித்தார்.
அசிமின் இந்த ஆறுதலான பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.