வெளியானது பிக்பாஸ் சீசன் 5 திகதி போட்டியாளர்கள் அப்டேட்; கமலுக்கு சிக்கலா?
கடந்த நான்கு வருடங்களாக மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தான்.
முதல் சீசனுக்கு பின் அடுத்து ஒளிபரப்பான இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்கள் தொடங்குவதற்கு முன் கமல் அவற்றைத் தொகுத்து வழங்குவாரா இல்லையா என கேள்வி எழுந்தது.
இதையடுத்து, ஐந்தாவது சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா? என்கிற சந்தேகம் தேர்தல் முடிவுகளுக்கு முன் இருந்திருக்கலாம். தேர்தலில் கமல் தோல்வியைத் தழுவிய பிறகு அவர்தான் ஐந்தாவது சீசனைத் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.
தற்போது ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்கிற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆட்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கும் விஜய் டிவி ஒளிபரப்பு தேதியையும் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டாராம்.
கொரோனாவின் அனைத்து பரிசோதனைகளையும் முறையாக முடித்து போட்டியாளர்களை ஒரு மாதங்களுக்கு முன்பே கூட்டிவந்து அனைத்தையும் பக்காவாக ரெடி செய்ய உள்ளதாம்.
மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வருடமும் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கலுக்கு முடிவடையும் என தெரிகிறது.
ஆனால் கமல்ஹாசன் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் அவரது தேதிகள் ஒத்துவருமா, கடைசி நேரத்தில் கமல் கைவிரிப்பாரா என பலயோசனைகள் இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 5 வருவது உறுதி என்று கூறிவிட்டார்கள் விஜய் டிவி வட்டாரங்கள்.