திடீரென ட்விட்டரில் ட்ரெண்டாகும் பிக்பாஸ் ராஜூ! அப்படி என்னத்தா செஞ்சாரு பாருங்க....!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது செம்ம விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஓவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட முகம் வெளிவர ஆரம்பித்துகொண்டிருக்கிறது.
என்னதான் ஒவ்வொரு போட்டியாளர்களும் தன் கண்டெண்ட்டை கொடுத்து வந்தாலும், அபிஷேக் செய்யும் எந்த ஒரு விஷயமும் ப்ரோமோவில் இடம்பெற்று பல விமர்சனங்களுக்கு ஆளாகிறது.
ஆனால், மறுபக்கம் பிரியங்கா செய்யும் வெறுப்பான விஷயம், ராஜூ செய்யும் குறும்புத்தனமான விஷயங்கள் பலரையும் ரசிக்க வைத்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்றைக்கான நிகழ்ச்சியில் இடம்பெற்ற ராஜூ, போட்டியாளர்களை முன் அமர வைத்துக்கொண்டு, பைக் சவுண்ட் பற்றி வாயாலே மெமிக்ரி செய்து அசத்தி காட்டி இருக்கிறார்.
இதைக்கைதட்டி போட்டியாளர்கள் வரவேற்றனர். மேலும், ரசிகர்களும் ராஜுக்கிட்ட இன்னும் என்னவெல்லாம் திறமை இருக்கு என ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
you #RajuJeyamohan innum evlo talent ya unakulla iruku#Raju bhai 👌🏻💥🔥👌🏻#BiggBossTamil #BiggBossTamil5 pic.twitter.com/BAnwyIpQwC
— Bigg Boss Tamil 5 (@BiggBossS5Tamil) October 22, 2021