இரண்டாக பிரிந்த பிக்பாஸ் குடும்பம்: மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படத்தால் வெளியான உண்மை!
வி.ஜே.மகேஸ்வரி அவரது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தால் பிக்பாஸ் குடும்பம் இரண்டாக பிரிந்ததாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து 6ஆவது சீசனும் முடிந்து விட்டது.
[5UCTH9 ]
இதில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு சண்டை, காதல், பாசம் என எல்லாம் கலந்து 106 நாட்கள் சென்றது. 21 போட்டியாளர்களில் 3பேர் இறுதிப்போட்டி வரைச் சென்றார்கள்.
விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் என மூன்று பேர் போட்டியிட்டிருந்தனர். இவர் மூவருக்கிடையிலான போட்டியில் ஷிவின் மூன்றாம் இடத்தையும், விக்ரமன் இரண்டாம் இடத்தையும், அசீம் டைட்டில் வின்னராக வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரின் பார்ட்டி
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றியிருந்த வி.ஜே. மகேஸ்வரி தன் சக போட்டியாளர்களுக்கு தனது வீட்டில் பார்ட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அந்தப்பார்ட்டியில் ரக்சிதா, ஷிவின், விக்ரமன், ஷெரினா, ராம், ஏ.டி.கே, அசல் கோலாறு ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
இதில் அசீம்,மைனா, தனலட்சுமி, ஜனனி எனப் பல போட்டியாளர்கள் கலந்துக் கொண்டிருக்கவில்லை. இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அதே டீம் வெளியிலும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் மேலும் பிக்பாஸ் குடும்பம் இரண்டாக பிரித்துவிட்டார் மகாலட்சுமி என பலரும் தெரிவித்து வருகின்றனர்.