பிக்பாஸிற்குள் செல்லும் வைல்டு கார்டு போட்டியாளர்! உறுதி செய்த ஹாட்ஸ்டார்
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வைல்டு கார்டு போட்டியாளர் உள்ளே நுழைவதாக அதிகாரப்பூர்வமாக ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழையும் போட்டியாளர் குறித்து மக்கள் அதிகமாக பேசி வருகின்றனர்.
பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்கினால் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டை நிலவிவரும் நிலையில், அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறவும் செய்கின்றனர்.
இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாகவும், மேலும் ஒரு போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
இதனை உறுதிபடுத்தும் விதமாக ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் உள்ளே செல்லும் போட்டியாளர்களின் விபரம் வெளியிடாமல் அறிவிப்பினை மட்டும் கொடுத்துள்ளது.
இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர் யார் என்ற பெயரை நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
எத்தனை பேரு கரெக்ட் ஆ Guess பண்றீங்கன்னு பாப்போம்🤔#BiggBossTamil #KamalHaasan #DisneyplushotstarTamil pic.twitter.com/OgT48Q19Wa
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) December 7, 2022