பிக் பாஸ் சௌந்தர்யா காதல் குறித்து பதிலளித்த விஷ்ணு: ஏற்க மறுத்தாரா?
தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசனின் போட்டியாளர் சௌந்தர்யா முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் விஷ்ணு விஜய்க்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே சௌந்தர்யா லவ் ப்ரொபோஸ் செய்ததற்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார்.
பிக் பாஸ் சௌந்தர்யா
பிக் பாஸ் மக்களிடையே அதிக கவனம் பெற்ற இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். ஆரம்பத்தில் இந்த சீசன் பெரிதாக சுவாரஷ்யம் இல்லை என்றாலும் சில நாட்களின் பின்னர் சுவாரஷ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
தற்போது 90 நாள்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் செய்தனர்.
அப்படி, சௌந்தர்யாவை பார்க்க, சர்ப்ரைஸாக அவரின் நண்பரும் சின்னத்திரை நடிகரும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான விஷ்ணு விஜய் வந்திருந்தார்.
இதன்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான சௌந்தர்யா முன்னாள் போட்டியாளர் விஷ்னு விஷாலுக்கு அவருடைய காதலை தெரிவித்திருந்தார்.
சௌந்தர்யா மற்றும் விஷ்ணு விஜய் இருவரும் நீண்ட நாட்களாகவே நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் இவர்கள் காதல் ப்ரபோஸ் ரசிகர்களை கவனம் ஈர்த்தது.
இதற்கிடையே, சௌந்தர்யாவின் லவ் ப்ரொபோஸ் குறித்து விஷ்ணு விஜய் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், உண்மையாகவே இருவரும் காதலிப்பதாகவும், சில காலம் காதலர்களாக சுற்றிவிட்டு பின்னர் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் விஷ்ணு அறிவித்துள்ளார். இந்த வருடத்தின் இறுதிக்குள் திருமணம் நடக்கும் எனவும் அவர் உறுதி செய்துள்ளார்.
Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுனிதா... விஷாலின் காதல் விளையாட்டை வெளுத்து வாங்கிய தருணம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |