Bigg Boss: பேசாமல் இருந்த விஷாலின் தந்தை... பிக் பாஸ் வீட்டிற்குள் கேட்ட மன்னிப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் தற்போது எண்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 பேர் உள்ளே இருக்கின்றனர் இதில் இந்த வாரத்தில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளது. இதில் தீபக் மற்றும் மஞ்சரியின் பெற்றோர்கள் வந்த நிலையில், தற்போது விஷாலின் பெற்றோரும் உள்ளே வந்துள்ளனர்.
விஷால் தந்தையிடம் பேசாமல் இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது தந்தை மகன் விஷாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |