பிக்பாஸ் வீட்டுக்குள் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா... லீக்கான புகைப்படம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்வது உறுதியாம். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்த மாதம் 5-வது சீசன் தொடங்க உள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் கசிந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், அண்மைய சில நாட்களாகவே பிரபல தொகுப்பாளினி பிரியங்கா , ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை உறுதி செய்வது போல ஒரு தகவல் கிடைத்துள்ளது.
பிரியங்கா தொகுத்து வழங்கிய ஹிட் ஷோவான Start Music 3வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த ஷோவை தற்போது புதிதாக பிரியங்காவிற்கு பதிலாக மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உடனே அப்போ கண்டிப்பாக பிரியங்கா பிக்பாஸ் 5வது சீசனிற்கு செல்கிறார் செல்வது உறுதி என்று கூறி வருகின்றனர்.