15 பெண்களை ஏமாற்றினாரா? அரசியல் போர்வைக்குள் மறைந்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்..!
பிக்பாஸ் விக்ரமன் சுமார் 15 பெண்களை ஏமாற்றியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்து கொண்டவர் தான் விக்ரமன்.
அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விக்ரமன் பல இலட்சம் காசுக்காக பெண்களை ஏமாற்றியதாக ஒரு தகவலை கிருபை முனுசாமி என்ற பெண் வெளியிட்டுள்ளார்.
15 பெண்களுக்கு மேல் மிரட்டல்
இந்த நிலையில் விக்ரமன், தன்னை ஜாதி பெயர் கூறி அவமானப்படுத்தியதாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.
இது தொடர்பான மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஆப்பிள் போன், ஆப்பிள் வாட்ச், எர் பாட்ஸ் மற்றும் யூடியூப் சேனல் தொடங்க லேப்டாப் வேண்டும் என்று தன்னை வற்புறுத்தியதாகவும் கிருபா இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும், தற்கொலை அளவு போனதாகவும் கிருபா கூறியுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் பாடகி சின்மயிம் பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |