Bigg Boss: விக்ரமை அழவைத்து வேடிக்கை பார்த்த கனி, சுபிக்ஷா! கடைசியில் நடந்த டுவிஸ்ட்
பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே வந்த சுபிக்ஷா, கனி இருவரும் உள்ளே வந்த நிலையில், விக்ரமை சோகத்தில் ஆழ்த்தி அழ வைத்துள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர் வெளியேறினர்.
கானா வினோத் 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில், சான்ட்ராவும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் இந்த சீசனில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் பலர் உள்ளே வந்துள்ளனர். இன்று கனி உள்ளே வந்துள்ளது அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் விக்ரமை மட்டும் கண்டுகொள்ளாமல் அவர் தவறு செய்தது போன்று குற்ற உணர்ச்சியில் வைத்துள்ளனர். பின்பு இருவரும் விளையாட்டாக அவ்வாறு செய்ததாக கூறி, விக்ரம் கழுத்தை தொற்றிக் கொண்டு கட்டிப்பிடித்துள்ளனர்.
விக்ரமும் கண்ணீர் மல்க அழுது அவர்களுடன் அன்பை பரிமாறிக் கொண்டார். ஆனாலும் இந்த தருணம் மிகவும் அழகாக இருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |