Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற வைரம் டாஸ்கில் டிடிஃஎப் வாசன் அட்டகாசமாக விளையாடி ஒட்டுமொத்த வீட்டையும் தெறிக்க விட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அன்சர் வீட்டின் தலைவராக இருந்து வரும் நிலையில், எதிர்கட்சி தலைவராக முத்தழகி இருந்து வருகின்றார்.
பிக்பாஸ் எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த போட்டியாளர்களான ஷமா, ஜெய்சன் வென்றுள்ளனர். நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் வைரத்தை திருடி வைப்பதற்கு சரியான இடத்தினை கண்டுபிடித்து வைரத்தை திருடியும் வைத்துள்ளார்.

வீட்டிற்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சல்லடை போட்டு தேடியும் வைரத்தினைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் டிடிஎஃப்-பிற்கு விளையாட தெரியவில்லை என்று கூறியவர்களுக்கு இந்த வாரம் அதிர்ச்சி காத்திருக்கின்றது.
அவ்வாறு கூறிய போட்டியாளர்கள் எந்த இடத்தில் கோட்டை விட்டார்கள் என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |