கொஞ்சமாவது ரோசம் வேண்டாமா? டைட்டில் வின்னருக்கு விழுந்த 2ஆவது அடி!
கொஞ்சமாவது ரோசம் வேண்டாமா? என டைட்டில் வின்னரை இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று சரவண விக்ரம் அல்லது ஜோவிகா இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என நம்பப்படுகின்றது.
தொடர்ந்து அசிங்கப்படும் விக்ரம்
இப்படி ஒரு புறம் இருக்கையில் அதிகமான கிரின்ஜி வேலைகளை பார்த்து சரவண விக்ரம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.
அதன் படி, மாயா- தினேஷ் ஆகியோருக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாட்சியாக வந்து அசிங்கப்பட்டார். தற்போது பூர்ணிமாக விக்ரமனை பார்த்து செருப்பால் அடிப்பேன் எனக் கூறினார்.
இதற்கு விக்ரம் ஏதாவது ரியாக்ஷன் கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதனை கண்டுக் கொள்ளாமல் சென்று விட்டார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ கொஞ்சமாவது ரோசம் இல்லையா?...” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Vikram: Large size iruku
— RD Infra (@rd_infra) December 1, 2023
Poornima: Serupala adipen da.
Vikram: Seri vidu funky irukum ninachen
Poornima: Just for fun only, I didn't mean.#Vikram: ok.
People: Onnaku vekkam,manam,sudu,sorana yethavathu iruka?#Poornima edupudi vela pakkathaan vanthiya?#BiggBossTamil7 pic.twitter.com/dmziZC9RkX
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |