பல விமர்சனங்களுக்கு முகங் கொடுத்த வனிதா தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?
பல விமர்சனங்களுக்கு முகங் கொடுத்த வனிதா விஜயகுமார் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை வென்றவர் நடிகர் விஜயகுமார்.
இவரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார்.
இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
திருமணம்
இதனை தொடர்ந்த முதல் படத்திலே பலத்த வரவேற்பு கிடைத்தாலும் இவர் சினிமா விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விட்டார்.
இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பல சர்ச்சைகளுக்கு மத்தியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார்.
பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றினார்.
வைரல் புகைப்படங்கள்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வப்போது அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வார்.
அந்த வகையில் பிக்பாஸ் விமர்சனங்கள் செய்வதில் பிஸியாக இருந்த வனிதா, தற்போது பாலியில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் வேலைகளை ஆரம்பிக்க போவதாக புகைப்படங்களுடன் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் “என்ன கஷ்டங்கள் வந்தாலும் தன்னுடைய வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு வனிதா தான் சரியான உதாரணம்” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |