இறுதிமேடையில் அர்ச்சனா வெற்றி: பாதியில் அரங்கை விட்டு வெளியேறிய வனிதா- நடந்தது என்ன?
பிக்பாஸ் 7 இறுதிநாள் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் வெற்றியை தொடர்ந்து வனிதா பாதியிலேயே வெளியேறியது தெரியவந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெகு சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சி தற்போது ஏழு சீசன்களை சிறப்பாக நிறைவு செய்து விட்டு இந்த வருடம் எட்டாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது.
ஏழாவது சீசனில் டைட்டில் வின்னராக சின்னத்திரை நடிகை அர்ச்சனா தெரிவு செய்யப்பட்டார். இதற்கான ஆதரவுகள் ஒரு பக்கம் வந்தாலும் சர்ச்சைகள் சரமாரியாக எழுந்து வருகின்றன.
அந்த வகையில் பிரபல நடிகையும் விமர்சகருமான வனிதா,“ அர்ச்சனாவிற்கு டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. மாறாக அதனை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை ” என கொந்தளித்து பேசியிருந்தார்.
கொந்தளிக்கும் வனிதா
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றி கொடுத்த அர்ச்சனா முதல் வாரம் அழுது கொண்டே இருந்தார். பிரதீப்பின் ரெட்கார்ட்டிற்கு பின்னர் அர்ச்சனாவின் ஆட்டம் ஆரம்பித்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அர்ச்சனாவிற்கான ஆதரவும் அதிகரித்து வந்தது.
இப்படியொரு நிலையில் டைட்டில் வின்னர் பட்டத்தை அர்ச்சனாவிற்கு கொடுக்கக் கூடாது அவர் புகைப்பிடிக்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தனர்.
இவர்களை எல்லாம் தாண்டி மக்கள் அர்ச்சனாவை தான் டைட்டில் வின்னராக தெரிவு செய்தனர்.
இதனை பார்த்த வனிதா,“ அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டதை கமல் சாரால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாறாக அதற்காக உள்ளே சண்டைகள் கூட போனது.
அத்துடன் மணிக்கு கூட அந்த பட்டத்தை கொடுத்திருக்கலாம் என் மனது ஆறியிருக்கும். ஆக மொத்தத்தில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது..” என கூறியுள்ளார்.
இந்த செய்தி பிக்பாஸ் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |