சமையலறையில் நிரூப் சுருதியின் மோசமான செயல்! பொருட்கள் உடைந்து நாசமாகிய காட்சி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா சுருதி இருவரின் விளையாட்டில் வீட்டில் உள்ள பொருட்கள் உடைந்து நாசமாகியுள்ள காணொளி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரம் ஒளிபரப்பாகும் நிலையில், இதில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இதில், ரம்யா மற்றும் சதீஷ் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்துள்ளனர்.
நிரூப், சுருதி சண்டை
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் நிரூப் மற்றும் சுருதி இடையே கிச்சனில் விளையாட்டாக சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் சுருதி கையிலிருந்த கண்ணாடி பொருள் கீழே விழுந்து உடைந்துள்ளது. அதுமட்டுமின்றி தட்டி ஒன்றும் உடைந்து சில்லு சில்லாக தெறித்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கடும் அதிருப்தியில் காணப்பட்டுள்ளனர்.