பிக்பாஸ் அல்டிமேட்டில் அடுத்த சர்ச்சை போட்டியாளர் நுழைகிறார்! யார் தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியானது சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சீசன் 5 வெற்றியாளராக ராஜூ மோகன் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனியும் பிடித்தார்கள்.
மேலும், பிக்பாஸ் அல்டிமேட் அறிவிப்பையும் வெளியிட்டார் கமல். இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஓடிடி காண்பிக்கப்படும் என கூறியிருந்தார்.
அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்கள் அறிமுகம் செய்வதை காண்பித்து வருகிறார்கள்.
ஏற்கனவே, சினேகன், ஜூலி சென்ற நிலையில், தற்போது வெளியான அறிவிப்பின்படி அடுத்ததாக வனிதா உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.