Bigg Boss: Finale டிக்கெட் வென்றது யார்? பிக் பாஸ் வெளியிட்ட அறிவிப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே வெற்றியாளர் யார் என்பதை கூற ஆரம்பித்த பிக் பாஸ் கடைசியாக அதனை நிறுத்தி வைத்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர்.
இதில் இந்த வாரத்திற்கு ராணவ், விஷால், பவித்ரா, அருண், தீபக், மஞ்சரி, ரயான், ஜாக்குலின் என 8 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டும் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இன்றுடன் முடிவடையும் நிலையில், இதில் வெற்றி பெற்றது யார் என்பதை தெரிந்து கொள்ள மக்களும் போட்டியாளர்களும் ஆர்வமாகவே இருந்தனர்.
ஆனால் பிக் பாஸ் கடைசியாக ரிசல்ட் என்று கூறியதுடன், சனிக்கிழமை சொல்றேன் என்று அனைவரையும் அசிங்கப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |