ரெட் கார்டு வார்னிங் கொடுத்த விஜய் சேதுபதி.. பகீர் கிளப்பிய அட்வையிஸ்
பிக்பாஸ் சீசன் 9-ல் விஜய் சேதுபதி முதல் தடவையாக கம்ருதீனுக்கு ரெட் கார்ட் வார்னிங் கொடுப்பது போன்று கூறிய அறிவுரைகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரம் சென்றுக் கொண்டிருக்கிறது.
பிரவீன் காந்தி மற்றும் அப்சரா இருவரும் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழையவுள்ளனர்.
ரெட் கார்ட் வார்னிங்
இந்த நிலையில், நேற்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி அங்கு நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களை போட்டியாளர்களிடம் கேட்டிருந்தார்.

அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டில் மோசமான நடந்து கொள்ளும் பார்வதிக்கு வார்னிங் கொடுத்திருந்தார். முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் கம்ருதீன், சக பெண் போட்டியாளர்களை மோசமாக நடத்துவது, காதல் லீலைகள் செய்வது, திவாகரனை இழிவாக பேசுவது போன்ற மோசமான செயல்களை செய்து வருகிறார்.
இதனால் கடுப்பான பொது மக்கள் விஜய் சேதுபதியிடம் முறைப்பாடு செய்தாகவும், அவர் அதற்கு, “வேற சேனல் மாத்துங்க..” எனக் கூறினேன் என ஓபனாக கூறினார்.

அதன் பின்னர் நிகழ்ச்சி முடியும் பொழுது கம்ருதீனுக்கு ரெட் கார்ட் வார்னிங் கொடுப்பதாக கூறி சில அறிவுரைகளை வழங்கினார். இதனை கவனித்த இணையவாசிகள், “கம்ருதீனுக்கு இன்னும் ஒரு வாரம் தான்..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |