கேமராக்காக பேசாதீங்க.. கண்டிப்புடன் சொன்ன போட்டியாளர்- வரம்பு மீறிய ரியா தியாகராஜன்
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் ரியா தியாகராஜன், நடிகர் அருணை வரம்பு மீறி பேசியுள்ளார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது 8 ஆவது சீசனில் பயணத்தை தொடர்ந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இந்த வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படவுள்ளார். கடந்த வாரங்களில் 3 பிரபலங்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்றி கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக நடிகர் ராணவ், மாடல் வர்ஷினி வெங்கட், ரியா தியாகராஜன், தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளர் மஞ்சரி, நடிகை சுஜா வருணியின் கணவர் நடிகர் சிவாஜி தேவ் ஆகியோர் வந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு மொத்தமாக 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
வரம்பு மீறிய ரியா தியாகராஜன்
இந்த நிலையில், இன்றைய தினம் போட்டியாளர்கள் குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் மாற்றிக் கொள்ள வேண்டிய குணம் பற்றி பேச வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் ரியா பற்றி பேசிய அருண்,“ நீங்கள் சில விடயங்கள் செய்யும் பொழுது கேமராவுக்கு முன் செய்வது போல் உள்ளது. மற்றவர்களிடம் நீங்கள் எக்ஷன் காட்டி பேசுகிறீர்கள், உங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும்...” என கூறியுள்ளார்.
இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் கோபமடைந்த ரியா, “ இதற்கு நான் பதில் கூற வேண்டும். கேமராக்கிட்ட பேச வேண்டாம் எனக் கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் இருக்கிற இடத்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன். மீறினால்..?” என அருனை எச்சரித்துள்ளார்.
ரியாவின் இந்த பேச்சுக்கு விஜய் சேதுபதி என்ன பதிலடிக் கொடுப்பார் என்பதனை வார இறுதியில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |