சாப்பிடாமல் இருக்க முடிவு செய்யும் பெண் அணியினர்.. நாட்டாமை செய்யும் சுனிதா- நடந்தது என்ன?
அடுத்தடுத்து நடக்கும் சண்டைகள் காரணமாக பெண் போட்டியாளர்கள் சாப்பிடாமல் இருக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த செய்தியை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார். முந்தைய சீசன்களை விட இந்த சீசன் நிகழ்ச்சியின் டிஆர்பி சற்று உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது
பெண் போட்டியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
இந்த நிலையில், இன்றைய தினம் ஆண் போட்டியாளர்களுக்கும், பெண் போட்டியாளர்களுக்கும் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளது.
கடுமையான வாதங்களுக்கு பின்னர் பெண் போட்டியாளர்கள் சமைக்காமலும், சாப்பிடாமலும் இருப்பதாக முடிவு செய்துள்ளனர்.
இருந்த போதிலும் வாதங்கள் முடிவுக்கு வரவில்லை. “கோட்டை தாண்டி வர வேண்டாம்...” என தர்ஷிகா மற்றும் இன்னும் சில போட்டியாளர்கள் கண்டிப்பாக கூறி வருகிறார்கள்.
இந்த பிரச்சினைக்கு பிக்பாஸ் எப்படி முடிவு காணப்போகிறார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |