பிக் பாஸில் காதலனுக்காக பாடல் பாடிய அர்ச்சனா! மகிழ்ச்சியில் பூரித்த தருணம்
பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரும், சீசன் 8 போட்டியாளர் அருண் பிரசாத்தின் காதலியுமான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். இதன் போது நடந்த விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
பிக் பாஸ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அருண் பிரசாத், விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தவர். அவர் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவை காதலித்து வருகிறார்.
இது ரசிகர்கள் அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த நிலையில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் நுழைந்தனர்.
இதன் பின்னர் வெள்ளிக்கிழமையான இன்று போட்டியாளர்களின் நண்பர்களை உள் நுழைய உள்ளனர். அந்த வகையில் தற்போது அருணின் காதலிியான அர்ச்சனா வந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |