விஷாலின் முன்னாள் காதலியை விளாசிய தர்ஷிகா- ஆனந்தியும் உடந்தையா?
பிக்பாஸ் வீட்டில் தர்ஷிகாவும் பவித்திராவும் விஷாலுக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளிலிருந்து மந்தமாக சென்றுக் கொண்டிருந்தது.
இதன் காரணமாக முந்தைய சீசன்களிலில் இல்லாத வகையில் ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ளனர்.
இவர்களில் ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, ரியா மற்றும் சுனிதா என ஐந்து போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவர்களின் ஒருவர் தான் மீண்டும் உள்ளே வந்து விளையாட போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஷாலுக்காக நடக்கும் காதல் போராட்டம்
இந்த நிலையில், இன்றைய தினம் பொம்பை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதுவரையில் குழுவாக விளையாடிய போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாட ஆரம்பித்துள்ளார்கள்.
இன்றைய கொடுக்கப்பட்ட பொம்பை டாஸ்க்கில் தர்ஷிகாவின் பொம்பையை பெட்டியில் வைக்காமல் ரஞ்சித் மற்றும் ஜாக்குலின் இருவரும் மறைத்து வைத்துள்ளனர். இதனால் கடுப்பான தர்ஷிகா கோபமாக அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
பின்னர் பவித்திரா, ஆனந்தி, தர்ஷிகா மூவரும் பொம்பை டாஸ்க் குறித்து பேசுகிறார். அந்த சமயத்தில், “ ஒரு பையனுக்காக இரண்டு பெண்கள் அடித்து கொள்வது போன்று தெரிகிறது..” என உண்மை உடைத்து பேசுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் விஷாலுக்காக தர்ஷிகா மற்றும் பவித்திரா சண்டை போடுகிறார்களா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மாறாக பிக்பாஸ் வீட்டிற்குள் வர முன்னர் விஷால் மற்றும் பவித்திரா இருவரும் காதல் சர்ச்சையில் சிக்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |