ராணியின் உத்தரவால் கடுப்பான House mets.. சாப்பிடாமல் இருக்க முடிவு
ராணியின் உத்தரவால் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளிலிருந்து மந்தமாக சென்றுக் கொண்டிருந்தது. இதன் காரணமாக முந்தைய சீசன்களிலில் இல்லாத வகையில் ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ளனர்.
இவர்களில் ராணவ், வர்ஷினி, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, ரியா மற்றும் சுனிதா என ஐந்து போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களின் ஒருவர் தான் மீண்டும் உள்ளே வந்து விளையாட போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சாப்பிடாமல் இருக்கப்போகும் போட்டியாளர்கள்
இந்த நிலையில், பிக்பாஸ் வீடு தற்போது அரண்மனையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதில் ராணவ்- ராஜாவாகவும், பெண்கள் அணியில் சாச்சனா- ராணியாகவும் அரியணையில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரியணையில் இரண்டு நபர்களில் ஒருவர் தான் அமர முடியும் என பிக்பாஸ் கூறிவிட்டார்.
அதற்கான டாஸ்க்கில் ஆண்கள் அணியிலிருந்து கலந்து கொண்ட ராணவ் வெற்றி வாகை சூடி அரியணையில் அமர்கிறார்.
இதற்கிடையில் ராணியாக இருக்கும் சாச்சானா கூறியதை வீட்டிலுள்ள வேலையாட்கள் கேட்கவில்லை. இதனால் கோபமுற்ற ராணி, “என்ன சமைப்பது” என கேட்கும் பொழுது “பொறுத்திருங்கள் கூறுகிறேன்..” என்று கூறி விடுகிறார்.
இதனை தொடர்ந்து ராணியின் உத்தரவிற்கமையக “சாப்பிடாமல் இருப்போம்..” என்ற முடிவுக்கு வருகிறார்கள்.இதற்கு ராஜவாக இருக்கும் ராணவ் என்ன கூறப் போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |