சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு.. ரகசியமாக கிண்டி விட்ட சௌந்தர்யா- நடக்கப்போவது என்ன?
சௌந்தர்யாவின் தனிப்பட்ட வாதத்தினால் பிக்பாஸ் வீட்டில் சண்டை கிளம்பியுள்ளது.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளிலிருந்து மந்தமாக சென்றுக் கொண்டிருந்தது. இதன் காரணமாக முந்தைய சீசன்களிலில் இல்லாத வகையில் ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ளனர். இவர்களில் ராணவ், வர்ஷினி, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, பிக்பாஸ் விமர்சகர் ரியா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை முதல் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பாடசாலை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் அதிபராக வர்ஷினியும், உப அதிபராக அருணும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமான பாடசாலையை போல் ஆசிரியர்களாக மஞ்சரி மற்றும் ஜாக்குலின் இருவரும் நியமிக்கப்பட்டு, மீதமாக இருப்பவர்கள் பாடசாலை மாணவர்களாக இருக்கிறார்கள்.
உச்சக்கட்ட கடுப்பில் பவித்திரா
இந்த நிலையில், இன்றைய தினம் ஆண் அணியிலுள்ள விஷால் பெண் அணிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை சௌந்தர்யா ஏற்றுக் கொண்டுள்ளதுடன், மற்ற பெண் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனந்தியும், மஞ்சரியும் ஆரம்பம் முதல் தெரிவிப்பு தெரிவித்து வந்தனர், இப்படி பெண் அணியில் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் பெண்கள் அணியினர் தனியாக சென்று முடிவு செய்வோம் என செல்கிறார்.
இந்த செயற்பாட்டில் பவித்திராவிற்கு உடன்பாடு இல்லை, அவர் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு “நீங்கள் அனைவரும் சென்று பேசுங்கள், என்னை இப்போது தான் தெரிகிறதா? நீங்கள் அனைவரும் முடிவு எடுத்துட்டு எனக்கிட்ட சொல்லுவீங்க.. நான் சரி சொல்லணுமா?” என பேசியுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |