யாருடா லவ் பண்ணுறா... பிக்பாஸ் வீட்டில் கத்தி கூச்சலிட்ட சௌந்தர்யா- எல்லை மீறிய வாக்குவாதம்
"யாருடா லவ் பண்ணுறா.." என பிக்பாஸ் வீட்டில் சௌந்தர்யா கத்தியது ரசிகர்களை பதற வைத்துள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக இதுவரையில் 20 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். 6 வாரத்தில் இருக்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கூறிய நிலையில், சுனிதா வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி இருக்கும் பொழுது கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் நாங்கள் கடந்து வந்த மோசமான பாதையை கதையாக கூறினார்கள்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது பாடசாலை டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கு தனித்தனி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
யாருடா லவ் பண்ணுறா?
காலையில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு இருந்து கொண்டு இருந்தது. இந்த பிரச்சினை வெடித்து பவித்திரா- ராணவ் பிரச்சினை வீட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் கோபமான சத்யா ராணவிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.
வாக்குவாதம் முற்றி தற்போது பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் வாய் வார்த்தைகளால் தாக்கி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் கடுப்பான சௌந்தர்யா, “யாருடா லவ் பண்ணுறா?...” என கத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மஞ்சரி கூச்சலிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தியுள்ளார். பிரபலங்கள் என்பதனை மறந்து ஆளுக்கு ஆள் சண்டை பிடித்து கொள்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |