பிக்பாஸ் வீட்டில் நடக்கும் காதல் போராட்டம்.. இந்த வாரம் ஜோடி பிரிகிறார்களா?
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்கள் தொடர்பிலான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பரான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 8.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் அதன் பிறகு வாரந்தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறார். இதையடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் வகையிலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி ரணகளத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தார்கள். இதனால், ஆட்டம் சூடுபிடித்துள்ளதுடன் போட்டியாளர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக 10 வாரங்கள் கடந்துள்ளது.
இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
இந்த நிலையில் இந்த வாரம் பவித்திரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அருண், ரயான், அன்ஷிதா, விஷால், தர்ஷிகா ஆகிய போட்டியாளர்கள் நாமினேட்டாகி இருக்கிறார்கள்.
இதில் குறைவான வாக்குக்களை பெற்று தர்ஷிகா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக விஷாலுடன் இணைந்து காதல் கண்டன்ட் கொடுத்து வரும் தர்ஷிகா போட்டிகளில் கவனம் செலுத்துவது குறைவாக உள்ளது. இதனால் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில், “அப்போ காதல் ஜோடி பிரிகிறார்களா?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |