சேலை விலகியதால் வெடித்த சர்ச்சை- ஒரே கேள்வியில் வாயடைக்க வைத்த விஜய் சேதுபதி
சௌந்தர்யாவின் சேலை விலகியதால் நியாயம் கேட்க சென்ற சத்தியா விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கியுள்ளார்.
பிக்பாஸ் 8
பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனில் சென்றுக் கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் 5 வாரங்கள் இன்றுடன் நிறைவிற்கு வருகின்றது.
இதுவரையில், 3 பேர் வெளியேற்றப்பட்டும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஆறு பேர் என்ட்ரி கொடுத்ததால் வீட்டின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் தற்போது 21 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். கடந்த 3 வாரங்கள் எவிக்ஷன் இருந்தது.
இதனை தொடர்ந்து 4வது வாரத்தில் நோ எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டது.
சேலையால் வந்த வினை
இந்த நிலையில் 5வது வாரத்தில் குக் வித் கோமாளி புகழ் சுனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார். இப்படி இருக்கும் பட்சத்தில் சௌந்தர்யாவின் சேலை விலகியதால், அதனை தட்டிக் கேட்கும் விதமாக சத்தியா எழுப்பிய கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சௌந்தர்யாவை பார்த்து,“ நீங்கள் ஒரு படித்தவர் தானே...” என கேட்டுள்ளார். அதற்கு விஜய் சேதுபதி, “ சேலை அணிந்து கொண்டு பெண்கள் இருக்கும் பொழுது அது விலகினால் அது தவறா? அதற்கும் படிப்பிற்கும் என்ன தொடர்பு?” என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் சத்தியா எழுந்து நிற்கிறார். “பெண்கள் அணியும் ஆடைகள் அங்குள்ள மற்ற போட்டியாளர்களுக்கு தவறாக தெரியவில்லை என்றால் ஏன் சத்தியா இப்படி செய்கிறார்..” என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |