65 நாட்களில் மட்டுமே இத்தனை கோடியா? மைனாவின் சம்பளத்தை கேட்டு ஆடிப்போன பார்வையாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினியின் ஒரு நாள் சம்பளம் மட்டுமே 1.5 லட்சம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9-ந் திகதி பிரம்மாண்டமாக நடிகர் கமல்ஹாசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது வெற்றிகரமாக 60 நாட்களைக் கடந்து விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.
மணிகண்டன் சொன்ன ரகசியம்
இந்த நிலையில் சமீபத்தில் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டில் மைனாவின் சம்பளம் குறித்து சக போட்டியாளர்களிடம் பேசியுள்ளார்.
இது குறித்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மணிகண்டன், தனலட்சுமியிடம் "மைனா வாங்கும் சம்பளத்திற்கு இங்கு தகுந்த வேலையை செய்யவில்லை" என்று கூறினார்.
அதற்கு தனலட்சுமி, எவ்ளோ சம்பளம் மைனா வாங்குகிறார் என்று மணிகண்டனிடம் கேள்வி எழுப்பினார்.
மைனாவின் ஒரு நாள் சம்பளம்
மைனா ஒரு நாளைக்கு 1.5 லட்சம் வாங்குகிறார். அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்லும் போது 90 லட்சம் கிடைக்கும் என மணிகன்டன் கூறியுள்ளார்.
இதை கேட்ட தனலட்சுமி வியப்பில் ஆழ்ந்துளார்.
மேலும், உண்மையாக 65 நாட்களுக்கு அவரின் சம்பளத்தை எண்ணிப்பார்த்தால் 1 கோடிக்கும் அதிகமான பணத்தினை சம்பாதித்துள்ளார். வெளியே செல்லும் போது கோடிக்கணக்கான பணம் கையில் இருக்கும்.
#Myna ku oru naalaiku 1.5 latchamaa???#Dhana shocked and we too#Biggbosstamil6 pic.twitter.com/QResalPCfz
— Aadhik Sri (@aadhik_vet09) December 8, 2022
இந்த தகவல் வைரலான நிலையில் பார்வையாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.