அசீம் முகத்தில் முட்டை அடித்த தனலட்சுமி! கிழித்து தொங்கவிட்ட பார்வையாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் அசீமுக்கும், தனலட்சிமிக்கும் இடையில் சண்டை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏலியன்ஸ் மற்றும் ஆதிவாசிகள் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
விறுவிறுப்பை ஏற்படுத்திய மூன்றாவது ப்ரோமோ
இந்த டாஸ்கின் போது அசீம் முகத்தில் தனலட்சுமி முட்டையை உடைத்து ஊற்றிவிடுவார்.
ஆனால், எந்த ஒரு ரியக்சனையும் வெளிப்படுத்தாத அசீம் டாஸ்க்கில் தோல்வி அடைந்த பிறகு தனலட்சிமியை திட்டுகின்றார்.
அசீம் முகத்தில் நான் முட்டை அடித்து விட்டேன் என சந்தோஷப்பட்ட தனலட்சுமியை பார்த்து, நீ வெளியே போ ஒரு லட்சம் முட்டையை உன் மூஞ்சிலே அடிப்பாங்க என அசீம் பேசிய காட்சிகள் இறுதி ப்ரமோவில் வெளியாகி நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டியுள்ளது.
இதேவேளை, தனலட்சுமி நடந்து கொள்வதை பார்த்து அசீம் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.