லட்சுமி ப்ரியா வெளியேற்றம் -கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு... வைரலாகும் புரொமோ!
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 10, நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு 100 நாட்கள் முழுக்க பொழுதுபோக்கு விருந்தாக அமைய உள்ளது.

நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களே ஆன நிலையில், போட்டியாளர்களுக்கு இடையேயான போட்டி தற்போது தீவிரமடைந்து வருகின்றது.
இதனால் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு
இந்த நிலையில், பிக்பாஸ் 10 ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு எலிமினேஷன் தகவல் வெளியாகியுள்ளது. ‘மகாநதி’ சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லட்சுமி ப்ரியா, பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியிருந்தார்.

நிகழ்ச்சியில் அவர் மீது ரசிகர்களின் கவனம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
Leader எலிமினேஷன் ஓட்டிங் மூலம் லட்சுமி ப்ரியா வெளியேற்றப்பட்டடுள்ளார். பிக்பாஸ், “லட்சுமி ப்ரியா, வெளியேறுங்கள்” என்று அறிவித்ததும், சக போட்டியாளர்கள் பலரும் அவரது வெளியேற்றத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
இதனால், பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது.குறித்த காட்சிகள் அடங்கிய pro தற்போது வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |