தவறை உணர்ந்த இலங்கை பெண் ஜனனி! புரிய வைத்து கமல் கொடுத்த அட்வைஸ்
இலங்கை பெண் ஜனனி இன்று அவர் செய்த தவறை உணர்ந்து விட்டதாக நடிகர் கமலிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமை என்பதால் உலகநாயகன் போட்டியாளர்களை சந்தித்தார்.
இதன்போது, அந்த வாரத்தில் நடந்த விவாதங்கள் குறித்து கமல் கலந்துரையாடினார்.
இதில் நள்ளிரவில் குயின்ஸியின் டவலை ஜனனி எடுத்ததால் பெரிய பிரச்சினை வெடித்திருந்தது.
தவறை உணர்ந்த ஜனனி
இந்த விவாதத்தில் ஜனனி கோபமாக காபி கப்பை போட்டு உடைத்துவிட்டு, தெரியாமல் தானே எடுத்தேன் என சொல்லி கத்தினார்.
மீண்டும் குயின்ஸி, நியாயமாக நான் தான் இதற்கு கோபப்பட வேண்டும், ஆனால் நான் உன் மீது எந்த கோபமும் இல்லை என்று சொல்லிவிட்டேன். நீ எதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கிறாய்? என்று கூற பெரிய விவாதமாக இருந்தது.
கமல் கொடுத்த அட்வைஸ்
அது குறித்து கமல் விசாரித்தார்.
இருவரும் மன்னிப்பு கேட்டு கொண்டதால் பிரச்சினை முடிந்தது. ஏன் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்தீர்கள் அது தவறு என்று ஜனனியிடம் அறிவுரை கூறி அவருடைய தவறை புரிய வைத்தார்.
பிறகு தான் செய்தது தவறு என்று புரிந்து ஜனனி இனி எந்த பொருளையும் சேதப்படுத்த மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டார். அப்படியே நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது.