ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா?
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பட்டு வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
பொட்டி படுக்கையுடன் வெளியேறும் பிரபலம்
இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 9 நாமினேஷனில் திவாகரன், பார்வதி, சபரி, கம்ருதின், ரம்யா, அப்சரா, அரோரா, எப்.ஜே மற்றும் கெமி இருக்கிறார்கள்.
இவர்களில் மிகக்குறைவான வாக்குகளை பெற்றும் எப். ஜே மற்றும் கெமி இருவரும் இருக்கிறார்கள். பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ளுதல், தவறான பேச்சுக்கள், சண்டைகள் இப்படி பார்க்கும் பொழுது எப். ஜே வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு நாட்களாக என்ன நடந்தாலும் சண்டை போட்டு விட வேண்டும் என்ற மனநிலையுடன் வந்த பிரபலங்கள் இப்படி மக்கள் வாக்குகளால் வெளியேறுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விடயமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
