பிக் பாஸில் இந்த வாரம் மக்கள் வாக்குகளின்படி கண்ணீருடன் வெளியேறப்போகும் போட்டியாளர்
பிக் பாஸில் இந்த வாரம் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியெறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கியது. பல டாஸ்குகளை கடந்து இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் போட்டியாளர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர். இதன் பின்னர் வெள்ளிக்கிழமை போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளனுப்பப்பட்டனர்.
இந்த வாரம் முழுக்க முழுக்க பாச மழையில் நனைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் வார இறுதியில் பிரியத்தான் போகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், ராணவ், மஞ்சரி, ஜெஃப்ரி, விஷால் ஆகிய 7 பேர் நாமினேட் ஆகி உள்ளனர்.
இவர்களில் வாக்குகள் அடிப்படையில் துன்னிலையில் இருப்பவர் ஜாக்குலின்.அவருக்கு அடுத்தபடியாக மஞ்சரி, ராணவ் மற்றும் பவித்ராவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர்களும் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை.
இதில் ஆபத்தான நிலையில் இருப்பவர் விஜே விஷால், ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா தான். இந்த மூவரில் மிகவும் குறைவான வாக்குகள் பெறறவர் அன்சிதா தான். எனவே இவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |