பிக் பாஸ் வீட்டில்: 100 நாட்கள் இருக்க ஆசைப்பட்டு இந்த வாரம் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியாகிய போட்டியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது இவருடைய ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் வாரத்தை விட தற்போது மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வருகின்றது. தற்போது 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.
தற்போது இரண்டு வாரங்கள் இரண்டு போட்டியாளர்கள் வெளியெறினார்கள். முதல் போட்டியாளராக ரவீந்தர் வெளியேறினார்.இவர் கன்டென்ட் கொடுத்து விளையாடி வந்த போதிலும், உடல் அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவரால் ஒத்துழைப்பு தர முடியவில்லை.
அதேபோல் இவருடைய மனைவி மகாலட்சுமி பிக் பாஸ் தரப்பிடம் தன்னுடைய கணவரை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இரண்டாவதாக அர்னவ் வெளியேறினார் இவர் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்றது தான் இதற்க காரணம் என கூறப்பட்டுள்ளது.
தற்போது மீதமுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், தர்ஷா குப்தா, பவித்ரா, அன்சிதா, ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா ஆகியோர் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று சேஃப் சோனில் இருப்பதாக நெட்டிசன்கள்கள் கணித்து கூறினர்.
இவர்களை தொடர்ந்து, அஞ்சிதா, ஜாக்குலின், பவித்ரா, மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த வாரம் இவர்களில் ஒருவர் தான் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகி இருந்தது.
இதை வைத்து பார்த்தால் நாமினேஷன் ப்ரீ டாஸ்கை பவித்ரா வென்றதன் மூலம் அவர் சேப் சோனுக்கு சென்றுள்ளார்.
மீதம் இருந்த ஜாக்குலின், தர்ஷா குப்தா மற்றும் அன்ஷிதா ஆகிய மூன்று போட்டியாளர்களின் இருந்து இந்த வாரம் தர்ஷா குப்தா குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் போட்டியை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
வெளியேறும் போது தர்ஷா குப்தா கூறியது 24 மணி நேர நாமினேஷனில் ஒரு பொறியாளரை வெளியேற்ற டாஸ்க் வைக்கப்பட்ட போது, ஒரு மாதத்திற்கு தேவையான டிரஸ் எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வந்துள்ளேன்.
எனவே குறைந்த பச்சன் 100 நாட்களாவது பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருக்க வேண்டும் என ஆசைப்பட்டடேன் என கூறியது இவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |