நடுரோட்டில் பாட்டிலால் தலையில் அடித்த காதலன்.. கதறியழுத பிக்பாஸ் சௌந்தர்யா- நடந்தது என்ன?
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்- சௌந்தர்யா அவருடைய காதல் கதையை நிகழ்ச்சியில் ஓபனாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இப்படியொரு நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார்கள்.
கமல்ஹாசன் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகின்றது என பயந்த போது விஜய் சேதுபதி கமல்ஹாசனை விட பிக்பாஸை கலகலப்பாக கொண்டு செல்கிறார்.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 2 ஆவது வாரத்திற்கான தலைவராக சத்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
பாட்டிலால் தலையில் அடித்த காதலன்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 ல் முக்கிய போட்டியாளராக இருக்கும் சௌந்தர்யா அவரின் காதல் கதையை ஓபனாக நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அதாவது, “ கல்லூரி படிக்கும் பொழுது நான் ஒருவரை காதலித்தேன். அந்த சமயத்தில் அவருக்கு மாடலிங் செய்வது சுத்தமாக பிடிக்காது. நான் அவருக்கு தெரியாமல் மாடலாக சூட் செய்த புகைப்படங்களை என்னுடைய செல்போனில் மறைத்து வைத்திருந்தேன். அதனை அவர் பார்த்து விட்டார்.
இதற்கு நடுரோட்டில் வைத்து என்னை அடித்தார். அதற்கு முன்னரும் சில பிரச்சினைகள் வந்திருக்கின்றது. ஒரு முறை என் தலையில் ஜாஸ் பாட்டிலை தூக்கி அடித்துவிட்டார். அதனையும் தாங்கிக் கொண்டு பேசினேன்.
பின்னர் மாடலிங் செய்த புகைப்படங்களை பார்த்து அடித்த போது எனக்கு கோபம் வந்தது. அந்த உறவை தூக்கி வீசி விட்டேன். எனக்கு என்னுடைய கேரியர் முக்கியம் என்று முடிவெடுத்தேன்..” என கண்ணீருடன் கூறியுள்ளார்.
சௌந்தர்யாவிற்குள் இப்படியொரு முகம் உள்ளதா? என போட்டியாளர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |