பிக்பாஸில் காதலை கேட்க வெட்கப்பட்ட சௌந்தர்யா! ரயானின் காதல் வெற்றி பெறுமா?
அன்சிதாவிற்கு ஆண்கள் அணியில் இருப்பவர்கள் சாப்பாடு வைக்காமல் சாப்பிட்டதற்கு அன்சிதாவிடம் முத்துக்குமரன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ரயான், சௌந்தர்யா காதல்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுனிதா விலகிச்சென்றதை அடுத்து 20 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வாரத்தில் சவுந்தர்யா, சிவகுமார், ராணவ், சத்யா, ஜெஃப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சுரி, ரியா, ஜாக்குலின், ரஞ்சித், தீபக், சாச்சனா என 13 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடந்த எபிசோட்டில் சாப்பாடு விஷயத்தில் அன்ஷிதாவை மறந்துவிட்டு ஆண்கள் அணியினர் டிஷ் ஒன்றினை பங்கு பிரித்துள்ளனர்.
இதனால் தன்னை மறந்துவிட்டதைக் குறித்து அன்ஷி சண்டையிட்டுள்ளார். முதலில் ஆண்கள் அணியினர் தாங்கள் செய்த தவறை மறைத்தாலும் பின்னர் முத்து குமரன் மற்றும் தீபக் அன்ஷிதாவிடம் மனதார மன்னிப்பு கேட்கிறார்கள். இது மக்கள் மத்தியில் பாராட்டப்பட்ட ஒரு விஷயமாக கருதப்படுகின்றது.
இதன் பின்னர் ஒரு பக்கம் இருந்து முத்தக்குமரன், தர்சிகா, தீபக் போன்றோர் காதல் கதை பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
அப்போது தான் அது சௌந்தர்யாவிற்கும் கேட்கிறது. அப்போது சௌந்தர்யாவிடம் நீ லவ் பண்றியா என ரயான் கேட்க சௌந்தர்யா வெட்கப்படுகிறார்.
இவர் வெட்கப்படுவதை பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் யாரையோ லவ் பண்ணிட்டாங்களோ! அப்படி தான் உள்ளது. அந்த வகையில் ரயான் மற்றும் சௌந்தர்யா இருவரும் பிக் பாஸ் வீட்டில் ஒருவருக்கொருவர் நடந்து கொள்ளும் விதம் பற்றி இவர்கள் இருவரும் லவ் கன்டன்ட் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எல்லா சீசன்களிலிலும் ஒரு லவ் கன்டன்ட் இருப்பதை போல இங்கே ரயான் மற்றும் செளந்தர்யா இருவரும் காதலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மக்களின் கருத்துக்களும் இதுவாகத்தான் அமைந்திருக்கின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |