பிக்பாஸ் அர்ச்சனாவிற்கு அவரை போலவே ஒரு சகோதரி இருக்கா? வைரலாகும் குடும்ப புகைப்படம்
பிக் பாஸ் சீசன் 7ன் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனாவின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் தற்போது 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
முந்தைய சீசன்களைவிட இந்த சீசனில் சர்ச்சை சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் தற்போது டிஆர்பியும் ஏறிக் கொண்டே செல்கிறது.
இந்த பிக்பாஸ் சீசனில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது பின்னர் மாயா மற்றும் பூர்ணிமா புல்லி கேங்கின் அட்டகாசம் என சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு சர்ச்சை கிளம்பிக் கொண்டிருக்கின்றது.
அர்ச்சனா
இப்படியொரு நிலையில் வைல்ட் கார்ட்டில் உள் நுழைந்தவர் தான் அர்ச்சனா.
இவர் சின்னத்திரை நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் இப்படி மீடியாத்துறையில் ஏற்கனவே அறிமுகமானவர்.
பலர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற போது, அர்ச்சனா மட்டும் தான் பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்க கூடாது என கூறினார்.
இதனால் பிரதீப் ரசிகர்களால் அதிகமாக ஈர்க்கப்பட்டார். புல்லி கேங்கை அடித்து ஓட விட்ட பெறுமை அர்ச்சனாவையே சாரும், தனியாளாக நின்று அனைத்து போட்டியாளர்களுக்கும் பதிலடிக் கொடுத்து மக்கள் மத்தியில் பதிந்து விட்டார்.
அர்ச்சனாவிற்கு ஒரு பக்கம் ஆதரவு பெருகி வரும் நிலையில் அவரின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில், அம்மா, அப்பா, சகோதரியும் இருக்கிறார்கள்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ கண்ணு பட போகுது.. சுத்திப் போடுங்க” என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |