கட்சி மாறிய விஷ்ணு.. கண்ணீருடன் புலம்பும் பூர்ணிமா- நடந்தது என்ன?
விஷ்ணு தன்னை தாக்கி விடுவார் என்ற பயத்தில் பூர்ணிமா அழுதுக் கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து கடந்த வாரங்களிலிருந்து பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கள் அதிகமாகி வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் தங்களை அதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அழுது புலம்பும் பூர்ணிமா
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா - நிக்ஷன் ஆகிய இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்து வந்தார்கள்.
இதனை தொடர்ந்து நிக்ஷன் செய்யும் தவறுகளை மறைத்து அர்ச்சனாவை அவதூறாக நேற்றைய தினம் பேசியிருந்தார். விஷ்ணு, தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து அர்ச்சனா இந்த வாரம் நிக்ஷனை எப்படி மாட்டி விடலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
இதே வேளை, இன்றைய தினம் 5 கோல்ட் நட்சத்திரங்கள் வெல்வதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் கடுமையான வாதத்திற்கு தயாராக இருக்கும் பொழுது பூர்ணிமா, மாயாவிடம், “ விஷ்ணு என்னை தான் முதலில் தாக்குவார்..” என புலம்பியப்படி அழுகிறார்.
அத்துடன் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |