கடைசி நேரத்தில் மனம் மாறிய போட்டியாளர்.. Family Round அதிரடி மாற்றங்கள்-ஷாக்கில் ஆண்டவர்
கடைசி நேரத்தில் குணத்தை மாற்றி விளையாட தயாரான போட்டியாளரை பார்த்து ஆண்டவரே ஷாக்காகியுள்ளார்.
பிக்பாஸ் 7
தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணி, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்த காரணத்தினால் வாக்குகள் குறைவு என வெளியேற்றியுள்ளனர்.
அந்த வாரம் நிக்ஷன் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராமல் கூல் சுரேஷ் வெளியேறியுள்ளார்.
கடைசி நேரத்தில் மனம் மாறிய போட்டியாளர்
இந்த நிலையில் இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த Family Round துவங்கி இருக்கிறது. போட்டியாளர்களின் சொந்தங்கள் வந்து பார்வையிட்டு சில விடயங்களை அறிவுரையாக கூறியும் சென்றுள்ளனர்.
அந்த வகையில் இன்றைய தினம் வெளியேறப்போகும் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் கடைசி நேரத்தில் யார் எப்படி என புரிந்து கொண்டு விளையாட தயாராகவுள்ளார்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளியில் போக போகிறார் என்பது அவருக்கே தெரியாமல் இருக்கின்றது. அத்துடன் பெற்றார்கள் அறிவுரை வழங்கிய பின்னர் " இன்னும் நன்றாக விளையாடி இருந்தால் டாப் விளையாட்டு வீரராக இருந்திருப்பேன்" என பூர்ணிமா கூறியுள்ளார்.
அதற்கு ஆண்டவர், “ அப்போ இப்போ நீங்க டாப் பிளையர் இல்லையா?” என நக்கலாக கேட்டுள்ளார்.
இப்படி போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை அவர்களே புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்துள்ளார்கள். இனி வரும் எபிசோட்கள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |