வசமாக சிக்கிய நிக்ஸன்.. மன்னிப்பை தட்டிக்கழிக்கும் வினுஷா- விறுவிறுப்பான தருணம்
இன்றைய தினம் வினுஷாவிடம் நிக்ஸன் வசமாக சிக்கியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா, விஜய் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
மன்னிப்பை தட்டிகழிக்கும் வினுஷா
இதனை தொடர்ந்து வெளியில் சென்ற போட்டியாளர்கள் உள்ளே வர ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் இன்றைய தினம் விசித்திரா, நிக்ஸன், விஜய் ஆகிய மூவரும் வீட்டிற்கு வந்தனர். நிக்ஸன் பேசியதை வெளியிலிருந்து பார்த்த வினுஷா, “அவரிடம் கேட்பதற்காக காத்திருக்கிறேன்” என உள்ளே வந்தவுடன் கூறி விட்டார்.
இன்றைய தினம் உள்ளே வந்த பின்னர் இருவரும் இந்த விடயம் குறித்து பேசியுள்ளனர். அப்போது, “இவர்கள் நான் பேசியதை தவறாக காட்டியதற்கும், வெளியில் தவறாக பேசப்பட்டதற்கும் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்..” என நிக்ஷன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, “ இப்படி அடுத்தவர்களுக்காக தான் நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள் என்றால் அந்த மன்னிப்பு எனக்கு தேவையில்லை...” என வினுஷா வாதிட ஆரம்பித்துள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |