சற்றுமுன் வெளியேறிய நபர்! இன்றே எலிமினேஷனை அறிவித்த கமல்! நாளை காத்திருக்கும் அடுத்த ட்விஸ்ட்
பிக் பாஸ் வீட்டில் இருந்து சற்றுன்னர் ஒரு போட்டியாளரை நடிகர் கமல்ஹாசன் வெளியேற்றியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரொமோக்கள் எல்லாமே இன்று தாமதமாகவே வெளிவந்தது.
முதல் ப்ரொமோ வழமையாக 9 மணிக்கு வெளியாகும்.
தாமதமான ப்ரொமோ
ப்ரோமோவுக்காக 12 மணிவரை ரசிகர்கள் காத்திருந்த நிலையில் 1 மணிக்கு பிறகே முதல் ப்ரொமோ வெளிவந்தது. ப்ரொமோ வரவில்லை என்றதும் இன்று எவிக்சன் இல்லையோ என்று ரசிகர்கள் தப்பு கணக்கு போட்டிருந்தனர்.
இந்த நிலையில் தாமதமாக ப்ரோமோ வந்தாலும் எலிமினேசன் இன்றே நடந்துள்ளது நிகழ்ச்சியில் எதிர்பாராத திருப்பத்தினை கொடுத்துள்ளது.
அதிலும் பிக் பாஸில் ஒரு ட்விஸ்ட் நிகழ்ந்துள்ளது. இன்று ஒரு போட்டியாளரையும் நாளை ஒரு போட்டியாளரையும் வெளியேற்ற பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது.
பிக் பாஸ் வரலாற்றில் புதிய ட்விஸ்ட்
அந்த வகையில் சனிக்கிழமை எபிசோடிலேயே நடிகர் கமல்ஹாசன் ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்து இருக்கிறார்.
எதிர்பார்த்தது போல ராம் தான் மிக குறைவான வாக்குகள் பெற்று இன்று எலிமினேட் ஆகியுள்ளார்.
நாளைய தினம் பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறுகின்றார்.
அவர் ஆயிஷா என்ற தகவலும் நேற்று கசிந்து விட்டது.
எனினும், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.